நீங்கள் ஊகிக்கப்படுவது போல் மின் கட்டண திருத்தம் இருக்காது.

ஊடகங்களில் ஊகிக்கப்படுவது போல் மின்சார கட்டணத்தில் திருத்தம் இருக்காது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சற்றுமுன் டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின்சார கட்டணங்களை திருத்துவது என்பது அரசாங்கத்தின் கொள்கை முடிவு என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை திட்டமிடப்பட்ட மின்வெட்டுகள் இன்றி ஆண்டு முழுவதும் தடையின்றி மின்சார விநியோகத்தை நாடளாவிய ரீதியில் வழங்குவதற்கு மின்சார சபை திட்டமிட்டுள்ளது.

தற்போது உள்ள மின் உற்பத்தி நிலையங்களின் முழு கொள்ளளவும் மின் உற்பத்திக்கு பயன்பாட்டில் உள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.