எந்த ஒரு சந்தர்ப்பத்திலும்
நீங்கள் மாத்திரமே
பேசிக்கொண்டு இருக்காதீர்கள்
நீங்கள் மட்டுமே பேச்சாளர் என
நிரூபிக்கப்பட வேண்டிய
தேவைகளும் இல்லை
இன்றைய சிறந்த
பேச்சாளர்கள் பலர்
எப்போதும் பேசிக் கொண்டே
இருந்தவர்கள் இல்லை
யாரோ ஒருவரின் பேச்சினை
நன்றாக கேட்டவர்களாக
கூட இருப்பார்கள்
நிறைய நூல்களை
புரட்டியவர்களாக இருப்பார்கள்
பேசுகின்ற நொடிகளில்
கேட்பதற்கு யாரும் இல்லை
என்றால் அந்த பேச்சு
தேவையற்றது
எந்த இடத்திலும்
அந்த இடத்திற்கோ
அல்லது அதில் உள்ள
நபர்களுக்கோ
தேவையற்ற அல்லது
பயனற்ற சம்பாசனைகளை
நிறுத்திக் கொள்ளுங்கள்
மற்றவர்கள் சொல்வதை
முழுமையாக புரிந்து கொள்ள முடியாவிட்டாலும்
அவர்கள் சொல்வதை
செவிமெடுக்க கற்றுக் கொள்ளுங்கள் அல்லது முயற்சி செய்யுங்கள்
அவை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்
உங்களுக்கும் உதவும்
தே.நிலா