நெல் மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து

நெல் மூடைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று இன்று (29) விபத்துக்குள்ளாகியுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானை மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடி பகுதியிலிருந்து பொலன்னறுவை நோக்கி நெல் மூடைகளை ஏற்றிச் சென்ற லொறியே விபத்தில் சிக்கியுள்ளது.

எதிரே வந்த வாகனம் ஒன்றுக்கு வழி விடும்போது லொறி பாதையை விட்டு விலகி, கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் லொறி சேதமடைந்துள்ளது. எனினும், லொறி சாரதியும் உடன் பயணித்த மற்றுமொருவரும் காயங்களின்றி தப்பியுள்ளனர்.