நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஒரே வாரத்தில் 33 பேர் பலி.

நேபாளத்தின் மேற்கு பகுதிகளில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 33 பேர் உயிரிழந்தனர்.

கனமழையால் கர்னாலி மாகாணத்தின் பல்வேறு நகரங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும்  வெள்ளம் சூழ்ந்ததால் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

கனமழை பெரு வெள்ளத்தை தொடர்ந்து, ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன.