படகு மூலம் வரும் இலங்கையர்களை அவுஸ்திரேலியாவில் குடியேற தமது அரசாங்கம் அனுமதிக்காது. என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வலியுறுத்தியுள்ளார்.
தொழிலாளர் கட்சி அரசாங்கம் அகதிகளை திருப்பி அனுப்பாது, கடல் மார்க்கமாக சென்று அவுஸ்திரேலியாவை அடைந்து விட்டால், அங்கே நிரந்தரமாக குடியிருக்கலாமென ஆட்கடத்தல்காரர்கள் தெரிவித்ததாக அண்மையில் படகில் சென்ற பெண் ஒருவர் தெரிவித்ததாக சுட்டிக்காட்டிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், புகலிடக் கோரிக்கையாளர்கள் பற்றிய அவரது நிர்வாகத்தின் கொள்கை மிக தெளிவானது என தெரிவித்தார்.