பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து. ;  4 பேர் பலி.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

கடியாடா கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலையில் திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டதால் இந்த ஆலை தீப்பற்றி முழுவதுமாக எரிந்து வெடித்து சிதறியது.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தொழிற்சாலைக்குள் சிக்கி கொண்டவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் 4 பேர் சடலமாக மீட்டுள்ளனர்.