பதவியை இராஜினாமா செய்துவிட்டு சர்வகட்சி ஆட்சியை பொறுப்பேற்க தயார். : ரணில்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விமான நிலையத்தில் இருப்பதாகவும், ராஜபக்ச குடும்பத்தினர் தங்கம் உட்பட பொருட்களுடன் கப்பலில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள குரல் பதிவு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குரல் பதிவை பாதுகாப்பு படையின் முன்னாள் பிரதானி ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

பிரதமர் பதவியிலிருந்து விலகி சர்வகட்சி அரசாங்கம் ஒன்று பொறுப்பேற்பதற்கான வழிவகைகளை செய்யத் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாலும், உலக உணவுத் திட்டப் பணிப்பாளர் இந்த வாரம் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாலும், சர்வதேச நாணய நிதியத்திற்கான கடன் நிலைத்தன்மை அறிக்கை வரவுள்ளதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர்களின் இந்த பரிந்துரையை தாம் ஏற்றுக்கொள்வதாக பிரதமர் கூறியுள்ளார்.