ரஷ்யாவில் பதிவு செய்யப்படாத முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர்.
சைபீரிய நகரமான கெமரோவில் உள்ள முதியோர் காப்பகம் ஒன்றில் திடீரென பற்றிய தீ இரண்டாம் தளம் முழுவதும் எரிந்து நாசமானது.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், நாடு முழுவதும் பதிவு செய்யப்படாமல் இதுபோல் ஏராளமான காப்பகங்கள் இயங்குவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளன.