பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்  – பிரித்தானியா

பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுவதாக வெளியான தகவல்கள் குறித்து கரிசனையடைந்துள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்  Twitter பதிவொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டம் மனித உரிமைகளிற்கான மதிப்பிற்கு முரணான விடயம் என தெரிவித்துள்ள அவர், பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதில்லை என்ற உத்தரவாதத்தை அதிகாரிகள் பின்பற்றவேண்டும் என வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.