பயணத்துக்கான கட்டணத்தை கோரிய அங்கவீனமுற்ற ஆட்டோ சாரதியை தாக்கிய இருவர் கைது.

அங்கவீனமுற்ற சாரதி ஒருவர் செலுத்திச் சென்ற முச்சக்கரவண்டிக்கு கட்டணமாகச்  செலுத்த வேண்டிய 2,500 ரூபாவை வழங்காமல் தப்பிச் செல்ல முயன்ற இரு சந்தேக நபர்களைச் சுற்றிவளைத்து கைது செய்த பொலிஸார் அவர்களை தலங்கம பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கொட்டாவ நகரிலிருந்து தலவத்துகொட செல்வதற்காக இந்த ஆட்டோவில் ஏறிய இந்தச் சந்தேக நபர்கள் தலவத்துகொட சென்று பத்தரமுல்லைக்கு வந்து மீண்டும் கொட்டாவை சென்று தலவத்துகொட பிரதேசத்தில் உள்ள வங்கியொன்றுக்கு  சென்றதாக கூறப்படுகிறது.

இதன்போது முச்சக்கர வண்டி சாரதி சந்தேக நபர்களிடம் முச்சக்கரவண்டிக் கட்டணத்தைக் கோரியபோது, அவர்கள் தப்பிச் செல்ல முற்பட்டதுடன், முச்சக்கரவண்டி சாரதி அவர்களுடன் சண்டையிட முற்பட்ட போது, சந்தேக நபர்கள் இருவரும் சாரதியை கீழே தள்ளித்  தாக்கியுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.