பயணிகள் விமானம் ஏரிக்குள் விழுந்து விபத்து. ;  19 பேர்  பலி

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் சிறிய ரக பயணிகள் விமானம் ஏரிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19-ஆக அதிகரித்துள்ளது.

டாரஸ் சலாம் நகரில் இருந்து புகோபா நகரை நோக்கி சென்ற சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று மோசமான வானிலை காரணமாக, அங்குள்ள விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்த நிலையில், பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

26 பேர் மீட்கப்பட்டதாகவும், எஞ்சியோரை தேடும் பணி நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.