பல்கலைக்கழக மாணவர்களுக்கு  HIV தொற்று.

இலங்கையில் இவ்வருடம் இதுவரை 50 பல்கலைக்கழக மாணவர்கள் எச்.ஐ.வி. தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவலொன்று வெளியாகியுள்ளது.

நாட்டில் எச்.ஐ.வி. தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விடவும், இவ்வருடம் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு புதிதாக அடையாளம் காணப்பட்ட எச்.ஐ.வி. தொற்றாளர்களில், இளம் பௌத்த பிக்குகளும் அடங்குகின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாடசாலை மாணவர்கள் மாத்திரமன்றி, பல்கலைக்கழக மாணவர்களும் இவர்களில் அடங்குகின்றனர்.

இவ்வருடம் இதுவரை 50 பல்கலைக்கழக மாணவர்கள் எச்.ஐ.வி. தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இலங்கையில் எச்.ஐ.வி. தொற்றாளர்களில் பெரும்பாலானோர் இளம் சமூகத்தினர் எனத் தெரியவருகின்றது.

நாட்டில் இவ்வருடம் கடந்த 9 மாதங்களில் 342 எயிட்ஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.