பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பலி.

ஜம்மு – காஷ்மீரில் ஆற்றுப் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இந்திய-திபெத் எல்லை காவல் படையை சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 32 பேர் காயமடைந்தனர்.

அமர்நாத் யாத்திரை பாதுகாப்புப் பணி முடிந்து பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்த போது, பஹல்காம் பகுதியில் எதிர்பாராதவிதமாக பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்தது.

இதில்,  படையினர் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், காயங்களுடன் மீட்கப்பட்ட மற்றவர்கள்  மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், மேல்சிகிச்சைக்காக ஸ்ரீநகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.