பாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கில் நிலநடுக்கம். : 9 பேர் பலி.

ஆப்கானிஸ்தானில் 7.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, பாகிஸ்தானிலும் கடுமையான நில அதிர்வு ஏற்பட்டு இடிபாடுகளில் சிக்கி ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைத்தொடரை மையமாகக் கொண்டு நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், பாகிஸ்தான், இந்தியா, தஜிகிஸ்தான், கஜகஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் 1,000 கிலோமீட்டர் வரை நில அதிர்வுகள் உணரப்பட்டதாக, ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நில அதிர்வால் பாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கில் பல கட்டங்களின் சுவர்களில் நீளமான வெடிப்புகள் ஏற்பட்டதோடு சில இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்தன.

இடிபாடுகளில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். லாகூரில் சில நொடிகள் பூமி குலுங்கியதால் நில அதிர்வை உணர்ந்த மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறினர்.