பாகிஸ்தானில் சிற்றூர்தி விபத்து. ;  20 பேர் பலி.

தெற்கு பாகிஸ்தானில் இடம்பெற்ற வீதி விபத்து சம்பவம் ஒன்றில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 11 குழந்தைகளும் உள்ளடங்குவதாக அந்நாட்டு காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்த குழந்தைகள் 2 இற்கும் 8 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சிற்றூர்தி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் வீழ்ந்ததன் காரணமாகவே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

  அண்மையில் அப்பகுதியில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பால் அந்த பள்ளம் முழுவதும் வெள்ளநீர் தேங்கியிருந்தது. இந்த விபத்தில் 11 குழந்தைகள் உட்பட 20 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.  

இதேவேளை, இந்த சம்பவத்தில் மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர்.