பாடசாலை விடுதியில் தீ விபத்து. ; மாற்றுத்திறனாளி மாணவர்கள் 11 பேர் பலி.

உகாண்டாவில்,  பாடசாலை தங்கும் விடுதியில் நேரிட்ட தீ விபத்தில், பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் 11 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

மேலும் 6 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பார்வையற்ற மாணவர்களுக்கான அந்த  பாடசாலையின்  தங்கும் விடுதியில், நள்ளிரவு ஒரு மணி அளவில் பயங்கர தீ விபத்து இடம்பெற்றது.

இச்சம்பவம் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.