பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று(07) கிளிநொச்சியிலிருந்து வருகை தந்த விசேட பொலிஸ் குழுவினரால் கொள்ளுப்பிட்டியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்

யாழ்.மருதங்கேணி பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போது பொலிஸாருடன் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சட்டத்தணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி நீதிமன்றத்தில் நேற்று(06) விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வௌிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.