பாரிஸ் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி. ; 69 வயது நபர் கைது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் குர்து கலாச்சார மையம் மற்றும் சிகை அலங்கார நிலையத்தில் 69 வயது நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 3 பேர் உயிரிழந்தனர்.

 சிகை அலங்கார நிலையத்தில் பதுங்கியிருந்த கொலையாளியை போலீசார் கைது செய்தனர்.

பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த இவர், ஏற்கனவே 2016 மற்றும் 2021 ம் ஆண்டுகளில் கொலை முயற்சியில் ஈடுபட்டவர் என கூறப்படுகிறது.

கடந்த 2015ம் ஆண்டு முதல் பாரிஸில் தீவிரவாத தாக்குதல்கள், குழு மோதல்கள் அடிக்கடி நடைபெறுவதால் அச்சம் நிலவி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.  

குர்திஸ் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் இன ரீதியிலானது என பிரான்ஸ் தெரிவித்துள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டங்கள் மூண்டுள்ளது.

அரசாங்கம் எங்களை பாதுகாக்க தவறிவிட்டது  இது பயங்கரவாத தாக்குதல் என குர்திஸ் நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தின் பின்னர் அந்த பகுதியில் கூடிய நூற்றுக்கணக்கான குர்திஸ் மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதுடன் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை எரிந்து தீ மூட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகத்தில் ஈடுபட்டனர்.