பாலஸ்தீனத்தின் காசாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர்.
ஜபாலியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
தீ பரவி கட்டிடம் முழுவதும் தீ பரவியது.
பயங்கர தீ விபத்தில் சிக்கி 21 பேர் உடல் கருகி உயிரிழந்த நிலையில், மேலும் பலர் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.