பாலியல் இலஞ்சம் கோருவதை குற்றமாக மாற்ற அங்கீகாரம்.

பாலியல் இலஞ்சம் கோருவதை குற்றவியல் குற்றமாக மாற்றும் வகையில் தற்போது உள்ள சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி பாலியல் துன்புறுத்தல் குற்றத்திற்கு கடுமையான தண்டனையை அறிமுகப்படுத்த சட்டங்கள் வரைவு செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதி அமைச்சரால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின்படி, பாலியல் வன்கொடுமைகள் மற்றும் அனைத்து வகையான பாலியல் துன்புறுத்தல்களையும் குற்றவியல் சட்டத்தில் சேர்க்குமாறு சட்ட வரைவோர்களுக்கு அறிவுறுத்தப்படும்.

அத்துடன் இதன் போது பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் லஞ்சக் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்க புதிய பிரிவை அறிமுகப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.