பாலியல் ரீதியான மாத்திரைகளை பாவிப்பதால் உயிரிழப்போர் எண்ணிக்கை உயர்வு

முறையான மருத்துவ ஆலோசனையின்றி பாலியல் ரீதியான மாத்திரைகளை பாவிப்பதன் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி சட்டத்தரணி இரேஷா தேஷானி சமரவீர தெரிவித்தார்.

20 முதல் 25 வயதுக்கிடைப்பட்டவர்களும் 40 முதல் 45 வயதுக்கிடைப்பட்டவர்களுமே இதனால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் பல சந்தர்பங்களில் பாலியல் ரீதியான மாத்திரைகளை பயன்படுத்தி சிலரின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.

முறையான மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்ளாமை, எந்தவொரு தரமற்ற மாத்திரைகளை பெற்றுக்கொள்ளல் மற்றும் மாத்திரைகள் தொடர்பாக தெளிவின்மையே இதற்கு பிரதான காரணங்களாகும்.

விசேடமாக ஒரு மாதத்தில் 3 பேர் வரை உயிரிழக்கின்றனர்.

விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

ஆகவே முறையான மருத்துவ ஆலோசனை இன்றி இவ்வாறான மாத்திரைகளை பயன்படுத்துவது மிகவும் அபாயமானதாகும் என தேசிய வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி சட்டத்தரணி இரேஷா தேஷானி சமரவீர தெரிவித்தார்.