பிக்பாஸ் தமிழ் சீசன் 6 இன்று தொடங்கவிருக்கும் நிலையில் இந்த சீசனில் போட்டியாளர்களாக ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ஷிவின் கணேசன், ராபர்ட், ஷெரினா, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் என்ற ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி அரவிந்த், விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் சில போட்டியாளர்கள் வைல்ட்கார்ட் எண்ட்ரி ஆவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு ஆர்மி தொடங்குவது என்பது முதல் சீசனில் இருந்தே நடந்து வருகிறது என்பது தெரிந்ததே. முதன் முதலாக ஓவியாவுக்கு ஆர்மி தொடங்கிய ரசிகர்கள் அதன் பின்னர் பல போட்டியாளர்களுக்கு தொடங்கி உள்ளனர் என்பதும் சில ஆர்மிகளுக்கு இடையே வாக்குவாதம் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று தொடங்க இருக்கும் நிலையில் நிகழ்ச்சி தொடங்கும் முன்பே ஜனனிக்கு ஆர்மி தொடங்கப்பட்டுவிட்டது. சமூக வலைதளங்களிலும் ஜனனி ஆர்மி என்ற பக்கம் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இலங்கை தமிழரான லாஸ்லியா, மதுமிதா ஆகியோர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நிலையில் தற்போது மேலும் ஒரு இலங்கை தமிழர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கின்றார். ஜனனி பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்த அளவுக்கு விளையாடுவார்? ரசிகர்களை எந்த அளவுக்கு திருப்திபடுத்துவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.