கொழும்பில் அமைந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சொந்த இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர், பிரதமரின் சொந்த இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து, குறித்த இல்லத்துக்குள் நுழைந்த சிலர் அதற்கு தீ மூட்டியுள்ளனர்.
இந்நிலையில், ரணிலின் பாரம்பரிய வீட்டில் மிகப்பெரிய நூலகம் அமைந்திருந்ததது. இங்கு பொருட்களை விட அதிகளவிலான நூல்களே காணப்பட்டுள்ளன.
இலங்கையில் எங்கும் கிடைக்காத அரிய புத்தகங்கள் இந்த நூலகத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனக்குப் பின்னர் கொழும்பு றோயல் கல்லூரிக்கு இந்த வீட்டை நன்கொடையாக வழங்குவதற்கான கடைசி உயிலையும் ரணில் வெளியிட்டுள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.