பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் காலமானார்.

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் தனது 100வது வயதில் அகமதாபாதில் இன்று அதிகாலை காலமானார்.

உடல்நலக்குறைவால் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து சுமார் ஒன்றரை மணி நேரம் நலம் விசாரித்தார். மருத்துவ சிகிச்சையால் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார்.

பின்னர்,   இன்று தமது தாயார் காலமானதாக பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் உணர்ச்சிப் பூர்வமான செய்திக்குறிப்புடன் அறிவித்துள்ளார்.

உடல்நலக்குறைவால் உயிரிழந்த பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல், குஜராத்தின் காந்திநகரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.