பிரஸ்ஸல்ஸில் கத்திக்குத்து. ; பொலிஸ் அதிகாரி ஒருவர் பலி.

பெல்ஜிய தலைநகர் பிரஸ்ஸல்ஸில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில், பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

பிரஸ்ஸல்ஸ் வடக்கு ரயில் நிலையத்திற்கு அருகில் கத்தியால் குத்தப்பட்ட இரண்டு அதிகாரிகளும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சந்தேக நபர் முன்பு உளவியல் உதவி கோரி காவல் நிலையத்திற்குள் நுழைந்ததாக வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

தாக்குதல் நடத்தியவரின் நோக்கம் தெரியவில்லை, ஆனால் பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகள் விசாரணையை எடுத்துக்கொண்டதாக கூறுகின்றனர்.

வடக்கு பிரஸ்ஸல்ஸின் ஷேர்பீக் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் அதிகாரிகளே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகினர்.

இதில் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட அந்த அதிகாரிக்கு வெறும் 20 வயது என பெல்ஜிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மற்றொரு ரோந்துப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தாக்குதல் நடத்தியவரை சமாதனப்படுத்த முயன்றதாகவும் பின்னர் தாக்குதல்தாரி காலில் சுடப்பட்டார் என்றும் வழக்கறிஞர் செய்தித் தொடர்பாளர் கூறினார்.