பிரேசிலில் பலத்த மழை மற்றும் புயல் :  36 பேர் பலி

பிரேசிலின் தென்மாநிலத்தில் ஏற்பட்ட  பலத்த மழை மற்றும் புயல் காரணமாக 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பகுதியில் புயல் மற்றும் இடைவிடாத பலத்த மழை காரணமாக 60 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 1,650 பேர் தமது குடியிருப்புகளை இழந்துள்ளனர் எனவும் அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் அப்பகுதியில் மின்இணைப்புக்களும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்  அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.