பிரேஸில் மண்சரிவு. ;  இருவர் பலி, 30 பேரை காணவில்லை.

பிரேஸிலில்  ஏற்பட்ட மண்சரிவில்  குறைந்தபட்சம் இருவர் உயிரிந்ததுடன், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.

அதேவேளை, நெடுஞ்சாலையொன்றின்  ஒரு பகுதி மண்சரிவினால் மூடப்பட்டதுடன், 20 கார்கள், லொறிகள் உட்பட பல வாகனங்கள் மண்சரிவில் அடித்துச் செல்லப்பட்டன.

பிரேஸிலின் தென் பிராந்திய மாநிலமான பரானாவில்  இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள்  தெரிவித்தனர்.

உள்ளூர் அதிகாரி ஒருவர் இது தொடர்பாக கூறுகையில், ‘எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பது தெரியவில்லை. ஒரு வாகனத்துக்குள்  5 பேரும் இருக்க முடியும். 30 முதல் 50 பேர் வரை காணாமல் போயுள்ளனர் என மதிப்பிட்டுள்ளோம்’ என தெரிவித்தார்.