பிலிப்பைன்சில் வெள்ளம் மற்றும் மண்சரிவு. ;  31 பேர் பலி.

தெற்கு பிலிப்பைன்சில் நிலவும் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்குண்டு 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு பிலிப்பைன்சின பல பகுதிகளில் வெள்ளம் அதிகரித்துள்ளமையினால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

மேலும் 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.