புங்குடுதீவு தெற்கு கடலில் மூழ்கி ஒருவர் மரணம்.

புங்குடுதீவு தெற்கு கடற்பரப்பில் இன்று அதிகாலை இருவர் மீன்பிடிக்கச் சென்ற வேளை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மற்றையவர் கரைசேர்ந்துள்ளார்.

உயிழந்தவர் புங்குடுதீவைச் சேர்ந்த அன்பழகராஜன் ஜாக்சன் வயது (27) என்பவராவார்.

கடலுக்குச் சென்று கரைதிரும்பியவர் வழங்கிய தகவலையடுத்து கிராம மக்கள் கடலில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது இன்று காலை சடலம் மீட்கப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.