புத்தர் சிலை வைக்க முற்பட்ட போது, தடுத்த சிறுபான்மையினரை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல்.

திருகோணமலை – குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொன்மாலைக் குடா பகுதியில் பௌத்த மதகுருக்கள், சிறுபான்மை இன மக்களின் காணிக்குள் அத்துமீறல்களை மேற்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் ஒரு கட்டமாக சிறுபான்மையினத்தவர்களின் காணியில் புத்தர் சிலை வைக்க முற்பட்ட போது பதற்றநிலை தோன்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணிக்குள் நுழைந்த பௌத்த மதகுரு தமது மெய்ப்பாதுகாவலருடன் சென்றபோது குறித்த மெய்பாதுகாவலர், துப்பாக்கி முனையில் பொதுமக்களை அச்சுறுத்தியதாகவும் முறையிடப்பட்டுள்ளது.

புல்மோட்டை அரிசிமலை விஹாரையை சேர்ந்த பௌத்த மதகுருவே இந்த செயலில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பில் குச்சவெளி பிரதேச செயலகம் மற்றும் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் இணைந்து தங்களுக்கு நீதியை பெற்றுத் தருமாறு பாதிப்பப்ட்ட தரப்பினர் கோரிக்கை விடுக்கின்றனர்.