புலம்பெயர்ந்த இலங்கை தொழிலாளர்கள் பணம் அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தொடர்பான அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய புலம்பெயர் தொழிலாளர்கள் அனுமதிக்கும் சுற்றறிக்கையை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
குறித்த சுற்றறிக்கையில் புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்கள் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் சுட்டிக்காட்டப்பட்டிருந்தன.
இந்த நிலையில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விண்ணப்பப்படிவம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் சுற்றறிக்கையின் படி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒரு மின்சார வாகனம், நான்கு சக்கர வாகனம் அல்லது இரு சக்கர வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி உண்டு.
மேலும் இதற்கான அனுமதி 2022 மே மாதம் முதல் டிசம்பர் வரை செல்லுபடியாகும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.