பெட்ரோல் விநியோகம் நாளை மறுதினம் வழமைக்கு திரும்பும்.

பெட்ரோல் விநியோகம் நாளை மறுதினம் வழமைக்கு திரும்பும் என இலங்கை பெற்றோலிய தனியார் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் ஏற்றிய கப்பலொன்று நாளை இலங்கைக்கு வரவுள்ள நிலையில், பெட்ரோல் விநியோகம் நாளை மறுதினம் வழமைக்கு திரும்பும் என அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, டீசல் ஏற்றிய கப்பல் எதிர்வரும் சனிக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அண்மையில் தெரிவித்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.