பெண் நாடாளுமன்ற உறுப்பினரின் கன்னத்தில் அறைந்த எதிர்க்கட்சி எம்.பி

செனகல் நாட்டின் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் முற்றி எதிர்க்கட்சி எம்.பி, ஆளும்கட்சி பெண் நாடாளுமன்ற உறுப்பினரின் கன்னத்தில் அறைந்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செனகல் நாட்டின் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது பட்ஜெட் தொடர்பாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதம் இடம்பெற்றது.

இதில் ஆளும் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி. ஆமி என்டியாயே கினிபி என்பவருக்கும், எதிர்க்கட்சியை சேர்ந்த மசாதா சாம்ப் என்ற எம்.பி.க்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

இதில் ஆத்திரம் அடைந்த சாம்ப் தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்று எதிர்வரிசையில் அமர்ந்திருந்த பெண் எம்.பி. கினிபியின் கன்னத்தில் அறைந்தார்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து கினிபி மிகவும் ஆக்ரோஷத்துடன் சாம்ப் மீது நற்காலியை வீசி எறிந்தார். அப்போது மற்றொரு எதிர்க்கட்சி எம்.பி. கினிபியை உதைத்து கீழே தள்ளினார்.

இதனால் இரு தரப்புக்கும் இடையில் பெரும் கைகலப்பு ஏற்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.