பெண் வேடமிட்டு கொள்ளையர்கள் அட்டகாசம்.  ; பொலிஸார் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதியில் பெண் வேடமிட்டு கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதற்கமைய, புடவை அணிந்து பெண் போன்று நீளமான முடி அணிந்து பொருட்களை திருடிய நபரை களுத்துறை வடக்கு பொலிஸார் நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.

ராஜித குருசிங்க பொலிஸ் அதிகாரி சந்தேக நபரை கைது செய்ததுடன், திருடப்பட்ட ரைஸ் குக்கர், தண்ணீர் மோட்டார், பித்தளை பூச்சாடி, பீங்கான் கோப்பைகள் உள்ளிட்ட பல பொருட்களை மீட்டனர்.

சந்தேகநபரின் வாக்குமூலத்தின்படி, களுத்துறையில் பெண் வேடமிட்டு, அயலார் வீடுகளுக்குள் பிரவேசிக்கும் போது, அயலவர்களுக்கு சந்தேகம் வரவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக பயன்படுத்தப்பட்ட 7 புடவைகளையும் கண்டெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெண் வேடமிட்டு புதிதாக யாராவது நடமாடுவதனை அவதானித்தால் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.