பெற்றோல் பவுசருடன் 7 பேர் கைது.

ஆனமடுவ தோனிகல  பகுதியில் வீட்டுரிமையாளரொருவரின் தோட்டத்தில் எரிபொருள் பௌசர் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த பகுதியில் பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது குறித்த பவுசரில் பெற்றோல் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் 7  பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படடுள்ளனர்.

குறித்த பவுசரில் 9200 லீற்றர் பெற்றோல் இருப்பதாகவும் 4000 லீற்றர் பெற்றோல் நுரைச்சோலைப் பகுதியிலிருந்து வருகைத் தந்தவர்களுக்கு வழங்கியதாகவும் ஆனமடுவ பொலிஸார் விசாரணைகளில் தெரிவித்தனர்.

புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட  சந்தேக நபர்கள் இருவரும் நுரைச்சோலைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என  பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 7 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் மற்றும் ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.