பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்து ; 14 பேர் காயம்.

கொடக்கவல  கலஹிட்டிய பகுதியில் பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து மொனராகலை நோக்கி பயணித்த பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் இரத்தினபுரி   கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்து சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.