பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்து.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை பகுதியில் பேருந்தொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நேர்ந்தமைக்கான காரணம் வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் முன்னெடுத்துள்ளனர்.