பேலியகொடை – மெனிங் சந்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் 42 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வெள்ளை நிற மகிழுந்தில் பிரவேசித்த இரண்டு பேரால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.