பொருளாதார நெருக்கடியால் உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் சிறுவர்களை பாதுகாப்போம்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில், சிறுவர்கள் எதிர்நோக்கும் உளவியல் ரீதியான பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது

அதன் மத்திய குழு மற்றும் ஊடக குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்னசிங்கம்  தெரிவித்தார்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மற்றும் பேருந்து கட்டண அதிகரிப்புக்கு மத்தியில் மாணவர்கள் பாடசாலைக்கு சென்று தமது கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இந்த நிலையில் மன அழுத்தம் ஏற்படாமல் சிறுவர்களைப் பாதுகாக்க பெற்றோர் உட்பட சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடக குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்னசிங்கம் குறிப்பிட்டார்.