பொலிஸாரை பார்த்து குளத்தில் குதித்த இளைஞன் பலி

குருநாகல் பகுதியில் பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கையின் போது தப்பிக்க குளத்தில் குதித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (19) காலை குருநாகல் குளக்கரையில் ஓடிய இளைஞன் மீது சந்தேகமடைந்த பொலிஸார் அவர் பரிசோதனைக்கு உட்படுத்த முற்பட்டுள்ளனர். இதன்போது, திடீரென குருநாகல் குளத்தில் குதித்த இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் குளத்தில் மூழ்கி மேற்கொண்ட தேடுதலின் போது உயிரிழந்த இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், உயிரிழந்த இளைஞரின் கையில் இருந்து போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பெக்கெட் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.