போராட்டகாரர்களுக்கு ரணில் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு

நாட்டின் சட்டத்தின் பிரகாரம் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு சகலருக்கும் அனுமதி உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் அதே உரிமை உண்டு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். நாட்டின் அமைப்பை  மாற்ற வேண்டும் என்பதே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களின் கோரிக்கையாக இருந்தது. அதனை தானும் ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு நேற்று பிற்பகல் வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

நாடு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் வேளையில் தான் ஜனாதிபதியாக பதவியேற்றதாகவும், பொருளாதார சவால்களை முறியடித்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.