போராளி குழு வெறிச்செயல். ;  19 பேர் பலி.

ஆப்ரிக்க நாடான காங்கோவில், கிராமம் ஒன்றுக்குள் புகுந்து போராளி குழுவினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19 பேர் உயிரிழந்தனர்.

கிரிண்டரா என்ற கிராமத்திற்கு நள்ளிரவு ஒரு மணி அளவில் வந்த போராளி குழுவினர், வழியில் தென்பட்டவர்களை கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினர்.

அங்கிருந்த கடைகளை சூறையாடியதுடன், வைத்தியசாலை ஒன்றையும் தீயிட்டு கொளுத்திவிட்டு சென்றனர். ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள ஏ.டி.எப். போராளி குழு இந்த வெறிச்செயலை அரங்கேற்றி உள்ளனர்.

கடந்த வாரம், அதே பகுதியில் உள்ள மற்றொரு கிராமத்தில் அவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 35 பேர் உயிரிழந்தனர்.