போலி கணக்குகள் உள்ளிட்ட தவறான தகவல்களுக்கு எதிராக புதிய நடவடிக்கைகளை எடுக்க ஃபேஸ்புக் உட்பட பல சமூக ஊடக வலைத்தளங்கள் இணக்கம் தெரிவித்துள்ளது.
சமூக ஊடக வலையமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதன்படி, போலி கணக்குகள் உள்ளிட்ட தவறான தகவல்களுக்கு எதிராக அபராதம் விதிக்கும் முறை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் தவறான தகவல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.