மாத்தளை – கலேவெல, பட்டிவெல பிரதேசத்தில் நேற்று பௌர்ணமி தினத்தன்று (09) அதிகளவான நாய்கள் விஷம் கொடுத்து கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் பிரதேசவாசிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் கலேவெல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு கொல்லப்பட்ட நாய்களில் பல கருத்தரித்த பெண் நாய்களும், குட்டிகளுக்கு உணவளிக்கும் நாய்களும் உள்ளடங்கியிருந்ததாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவர் மீது அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளதுடன், அவர் அந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.