மகிந்த, பசில் ஆகிய இருவரும் நாட்டை விட்டு வெளியேற  தடை

இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சே ஆகிய இருவரும் நாட்டைவிட்டு வெளியேற ஆவணி 2 ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான இருவரும் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கக் கோரிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, இலங்கையை திவால் நிலைக்கு தள்ளிய ஆட்சியாளர்களுக்கு எதிராக விசாரணை நடத்தக் கோரிய வழக்கில் வரும் ஆவணி  1 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது.