மகிழுந்து விபத்தின் பின்னர் பெண்ணைத் தாக்கியதாக இருவர் கைது.

கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் நேற்று முன் தினம்  இடம்பெற்ற வாகன விபத்தொன்றின் பின்னர் பெண் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பம்பலப்பிட்டி பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்ட இருவரும் சுகாதார சேவை வழங்கும் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வரும் 42 மற்றும் 64 வயதுடைய இருவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

நேற்று முன் தினம் பம்பலப்பிட்டியில் இருந்து காலி முகத்திடல் நோக்கிப் பயணித்த மகிழுந்து ஒன்று அந்த திசையில் பயணித்த முச்சக்கரவண்டியொன்றின் பின்பகுதியில் மோதிப் பின்னர், அருகிலிருந்து வர்த்தக நிலையமொன்றுடனும் மோதி விபத்துக்குள்ளானது.

முச்சக்கர வண்டியின் சாரதி பலத்த காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

விபத்தின் பின்னர், மகிழுந்தின் சாரதி தப்பியோடியதுடன், குறித்த மகிழுந்தில் பயணித்த பெண்ணொருவரை இழுத்து வீதியில் தள்ளி அவரை இரு பெண்கள் தாக்கியமை சிசிரீவி காட்சிகளில் பதிவாகியிருந்தது.