மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் பலி.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதியில் நேற்று இரவு காட்டு யானை தாக்கி பெண்னொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு விவேகானந்தபுரத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் தனிமையில் உறங்கிக்கொண்டிருந்த  பெண்ணொருவரை  தாக்கி கொன்றுள்ளது.

குறித்த பெண்ணின் வீட்டையும் சேதப்படுத்தியுள்ள யானைகள் வீட்டிலிருந்த தோட்டங்களையும் சேதப்படுத்தி சென்றுள்ளது.

காலை வீட்டுக்கு சென்றவர்களே யானை தாக்கி உயிரிழந்த நிலையில் பெண்ணின் சடலத்தை கண்ணுற்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்த யானை தாக்குதல் காரணமாக குறித்த பகுதியை சேர்ந்த 66 வயதுடைய கிருஸ்ணபிள்ளை நீலாம்பிக்கை என்ற பெண்னே உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அண்மைக்காலமாக வெல்லாவெளி பிரதேசத்தில் காட்டு யானைகளின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையினை காட்டு யானைகளை கட்டுப்படுத்துமாறு பிரதேச மக்கள் தொடர்ச்சியான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.