மட்டக்களப்பில் சட்டவிரோத துப்பாகியுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமனியாமடு பிரதேசத்தில் சட்டவிரோத உள்ளுர் தயாரிப்பு துப்பாகியுடன் 27 வயது இளைஞர் ஒருவரை நேற்று சனிக்கிழமை (13) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று மாலை;  ஓமனியாமடு பிரதேசத்தில் பொலிசார் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அந்தபகுதி காட்டில் இருந்து வீட்டிற்கு உள்ளுர் தயாரிப்பு துப்பாகியை எடுத்துக் கொண்டுச் சென்ற 27 வயது இளைஞனை மடக்கிபிடித்து கைது செய்ததுடன் துப்பாகியையும் மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.