மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம்! – பெருமளவான பொலிஸார் குவிப்பு

மட்டக்களப்பு  மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள பண்ணையாளர்கள்  உள்ளிட்ட பலர்  செங்கலடி பகுதியில்  பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள், பொலிஸாரின் தடுப்பை மீறி செல்ல முற்பட்ட நிலையில் அதனை தடுக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், பொலிஸாரின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், இல்லையேல் கைது செய்யப்படுவீர்கள் என ஒலிபெருக்கி மூலம்  போராட்டக்காரர்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகின்றது.  எனினும், போராட்டக்காரர்கள் தங்களது எதிர்ப்பை தொடர்ந்தும் வெளியிட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு  செங்கலடி மத்திய கல்லூரிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருகைத் தருவதனை முன்னிட்டு இவர்கள் ஜனாதிபதி பயணிக்கும் குறித்த வீதியில் ஒன்று திரண்டு  இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.