மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடரும் கன மழை

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 123.3 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

தொடரும் கன மழையினால் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கான போக்குவரத்து பாதிக்கப்படும் நிலையில் காணப்படுகின்றது.

மேலும், பிரதேசத்தின் பிரதான குளங்களின் வான் கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ள நிலையில் நீரை வெளியேற்றும் நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, தாழ்நில பிரதேசங்களில் வாழும் மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.